ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை 03.07.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

வருகிற ஆகஸ்டு மாதம் 17,18ஆம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பம் சமர்பிக்க 01.07.2013  கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டபூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதையடுத்துகல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணபங்களை சரிப்பார்த்து, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து,  விண்ணபங்களை 100 வீதம் அடுக்கி 03.07.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.