சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினவிழா பள்ளிகளில் கொண்டாடப்படுவதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநரால் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:ஆகஸ்ட் 15ம் தேதி வியாழக்கிழமை சுதந்திர தின விழாஅனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படவேண்டும். பள்ளி அளவிலும், சரக அளவிலும் மாணவ, மாணவியரிடையேநாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில் போட்டிகளை நடத்திபரிசுகள் வழங்க வேண்டும். மேலும், அன்று அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்றுகள்நட்டு பராமரிக்க வேண்டும். வனத்துறையினரிடம் மரக்கன்றுகளை இலவசமாகபெற்று பள்ளி வளாகத்தில் மாணவர்களை கொண்டு மரக்கன்று களை நட வேண்டும்.இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனகூறப்பட்டுள்ளது